Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இப்படி ஒரு பிளானா….. அப்ப “தளபதி 67” வேற லெவல்ல இருக்கும் போலயே….. வெளியான மாஸ் அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாத்தா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியில் லோகேஷ் பிசியாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட படப்பிடிப்பு மூணாறு பகுதியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மூணாறு பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் முதற்கட்ட படைப்பிடிப்பு மும்பையின் லோனாவாலா இடத்தில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |