மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
இதனயடுத்து, இவருக்கும் தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் துபாயில் நடைபெற்றதாக திருமண புகைப்படங்களை பூர்ணா பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த பூர்ணாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பூர்ணாவிற்கு அவரது கணவர் அளித்த பரிசுகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இவருக்கு 2700 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளை அவரின் கணவர் பரிசாக கொடுத்துள்ளாராம். மேலும் 25 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். அதோடு புதிய கார் ஒன்றையும், சில நிறுவனங்களில் பூர்ணாவை பார்ட்னராகவும் சேர்த்துள்ளாராம். இந்த பரிசுகளின் மொத்த மதிப்பு 30 கோடி என கூறப்படுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.