எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
எகிப்து முக்கிய தொல்பொருள் இடங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பழம்பொருட்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடக்கு அபிடோஸில் எகிப்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில் ஆய்வாளர்கள் மிகப்பெரிய மதுபான தொழிற்சாலை இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனை ஆய்வு செய்ததில் அது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் மதுபானத் தொழில் கூடம் உள்ளது என்று ஏற்கனவே கண்டறியப்பட்டது தான். ஆனால் அது எங்கு உள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை. அதனை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழிற்சாலையில் பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 22 ஆயிரத்து 400 லிட்டர் கள் தயாரிக்கும் அளவிற்கு வசதிகளும் உள்ளது. மேலும் கல்லறையில் அரச சடங்குகள் நடைபெறும் போது அவர்களுக்கு இங்கிருந்துதான் மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டு இருக்கும் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.