மராட்டியத்தில் மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்கள் வந்து செல்லும் நடைமேடைக்கு கடந்த 12ஆம் தேதி ஆட்டோ ரிக்ஷா ஒன்று வந்துள்ளது. இது பற்றி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த பயனாளர்கள் பலர் காவல்துறையின் கவனத்திற்கு வீடியோவை கொண்டு சென்றனர். உடனடியாக அதிகாரிகளும் பணியில் இறங்கினர். இருப்பினும் இந்த விஷயத்தில் ரயில்வே போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநரையும் பிடித்து கோட்டில் ஆஜர்படுத்தி ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி வீடியோவையும் ரயில்வே போலீசார் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில், மதியம் ஒரு மணிக்கு குர்லா நடைமேடை 1 க்கு ஆட்டோ ஒன்று தவறாக பின்புறத்தில் இருந்து நுழைந்து விட்டது. ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீசார் கைது செய்தார். ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுனருக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.