மத்திய அமைச்சர் எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரி வருகை புரிந்துள்ளார். நேற்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடாசலம் மருத்துவம் கல்லூரியில் பிரதமர் கனவு திட்டம் குறித்து கலந்த ஆலோசனை செய்தார். அப்போது Modi @ 20 Dreams Meet Delivery என்ற புத்தக கருத்துரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவண குமார், மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன், மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்து கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே 11 மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிம்பர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவம் பொறியியல் சட்டம் உள்ளிட்ட படிப்புகளை தங்களது தாய் மொழியில் படிக்க புதிய கல்வி கொள்கை வழிவகுத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, 3 மணிக்கு முதியால்பேட்டை சோலை நகர் இளைஞர் விடுதியில் மீனவ சமுதாய குடும்பங்களுடன் கலந்து உரையாடினார். மாலை 4.30 முதல் 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் புதுச்சேரி மாநில வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மத்திய அமைச்சர் வருகை முன்னிட்டு புதுச்சேரியிஷ் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.