Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடையாறு தொல்காப்பிய பூங்காவில் இனி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் 58 ஏக்கர் பரப்பில் கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, தொல்காப்பியப் பூங்கா என்ற சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கி அதனை பராமரித்தும் வருகிறது. இந்தநிலையில், நகரிய கடல்சார் ஈர்ப்புலன்களின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பின் அவசியத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக தொல்காப்பிய பூங்காவை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வாரத்தில் 3 நாட்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் கட்டணத்துடன் நடைப்பயிற்சி செய்வதற்கு காலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரையும், மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையும் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் நடைப்பயிற்சி செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை தொல்காப்பிய பூங்காவின் இணையதளத்தில் www.chennairivers.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சென்னை ராஜா அண்ணாமலைபுரம், எண் -6 /103, டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் உள்ள பூங்கா அலுவலகத்தில் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.044- 2461 4523, 97865- 58397 மற்றும் 98408-13321 இந்த எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |