கிருஷ்ணகிரியில் பிரியாணி வாங்கியபோது அதில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாலையில் ஒரு ஸ்டார் பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு பிரியாணி சாப்பிடுவதற்காக ஒரு நபர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் பிரியாணியை வாங்கி சாப்பிடுவதற்கு பார்சலை திறந்தபோது அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது கத்திரிக்காயில் இருந்தும்தான் புழு வரும், பிரியாணியில் புழு இருந்தது எல்லாம் ஒரு புகாரா? என்று அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.