Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. “கிறிஸ்துமஸ் பரிசாக துப்பாக்கி”… சிறுவனின் கொடூர செயல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் சக மாணவர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில்  உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேரை கொலை செய்தது தொடர்பாக ஈதன் க்ரம்ப்ளே(15) என்ற சிறுவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஈதன் க்ரம்ப்ளேயின் பெற்றோரான ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தம்பதியினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் மகனின் கொடுமையான செயலுக்கு துணை போனதாக கூறி கைதாகியுள்ள ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் தம்பதியினர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அதாவது நடந்தது என்னவென்றால் ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தம்பதியினர் கிறிஸ்துமஸ் பரிசாக துப்பாக்கியை வாங்கி வந்தனர். இந்த துப்பாக்கி தொடர்பான எச்சரிக்கைகளை தம்பதியினர் மகன் ஈதன் க்ரம்ப்ளேயிடம் குறிப்பிடாமல்இருந்தாக கூறப்படுகிறது. மேலும் இணையத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வாங்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டபோது, தவறு செய்தால் எப்படி சிக்காமல் இருப்பது என கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த தம்பதியினர் மகனுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஈதன் க்ரம்ப்ளே அந்த துப்பாக்கியால் பள்ளி மாணவர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். மேலும் ஈதன் தமக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கி குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஈதன் க்ரம்ப்ளே மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக்கு ஆயுதம் எடுத்து வந்ததுடன் கொடூர நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி கைதானவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மிக்சிகன் மாகாணத்தில் அமலில் இருக்கும் விதிகளின்படி 18 வயதிற்குட்பட்டவர்கள் துப்பாக்கி வைத்திருப்பதும், பரிசளிக்கப்படுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |