Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… இயற்கை எரிவாயு விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கெஜரிவால் தலைமயில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனைப் போல அதிகரித்தவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களில் பயன்பாடு டெல்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இந்திர பிரஸ்தா எரிவாயு நிறுவனம் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலையை கிலோக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்தது.

அதன்படி அதன் விலை இனி டெல்லியில் 78.61 ஆக விற்கப்படும். இந்த விலை உயர்வான சில நகரங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ.4 மற்றும் யூ.5 என்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நோய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் ரூ.81.17 ஆகவும், குருகிராமில் ரூ.86.94 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது. அதனைப்போலசி.என்.ஜி. சில்லரை விலையில் கிலோ ஒன்றுக்கு முசாபர்நகர், மீரட் மற்றும் சாம்லியில் ரூ.85.84 ஆகவும், ரேவாரியில் ரூ.89.07, கர்னால் மற்றும் கைத்தல் நகரங்களில் ரூ.87.27, கான்பூர், ஹமீர்பூர் மற்றும் பதேபூரில் ரூ.89.81, அஜ்மீர், பாலி மற்றும் ராஜ்சமந்தில் ரூ.85.88 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த விலை உயர்வானது இன்று காலை 6 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |