ரவீந்தர்-மகாலட்சுமி திருமண வாழ்த்து இணையத்தில் குவிந்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் பேசப்படும் விஷயமானது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகையான மகாலட்சுமி திருமணமாகும். தமிழ் சீரியலில் பிரபல நடிகையாக திகழ்பவர் மகாலட்சுமி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி மற்றும் அன்பே வா போன்ற சீரியலில் நடித்துள்ளார். இவர்களது திருமண போட்டோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. சீரியல் நடிகையான மகாலட்சுமி பணத்திற்காக மட்டுமே தமிழ் டைரக்டர் ரவீந்தரை திருமணம் செய்து இருக்கிறார் என்று விமர்சனங்களும் வெளிவந்தன. அதற்கு அவர்கள் மீடியாவில் விளக்கம் அளித்து வந்துள்ளன.
https://www.instagram.com/reel/CkQrMeKDyLo/?utm_source=ig_web_copy_link
இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியதாவது, ” சீரியல் நடிகையான மகாலட்சுமி ஆடி கார் வைத்திருக்கும் அளவுக்கு பெரிய ஆள் தான்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இவர்கள் திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது ஒரு புது சொகுசு காரை ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி வாங்கி இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து “வாழ்க்கை முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கின்றது ரொம்ப கஷ்டம் தான், அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா அது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் இப்படி நமக்கு கிடைத்த பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடைச்சா அதைவிட அதிர்ஷ்டம் வேறு என்ன வேணும் என ரவிந்தர் காருடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.