Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி வழக்குகளை பட்டியலிட புதிய முறை…. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி முடிவு….!!!

உச்சநீதிமன்ற தலைமை அமர்வு முன்பு நேற்று வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிட ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் பதிவாகும் வழக்குகள் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய், புதன் கிழமையில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவாளரை அறிவுறுத்தியுள்ளேன்.

இதனால் பதிவாகும் வழக்குகள் தானாக விசாரணை பட்டியலில் இடம்பெற்று விடும். அதனைத் தொடர்ந்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய வழக்குகளாக இருந்தால் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக புதன்கிழமை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |