Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… கூட்டுறவு துறையில் காலிடங்கள் எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் பெரியசாமி அசத்தல் அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற 69 வது கூட்டுறவுத்துறை வார விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கூட்டு துறையை பொறுத்தவரை வாரா கடன் என்பது 99% கிடையாது. தனது சொந்த நீதியில் இயங்கும் கூட்டுறவு துறை வங்கிகள் 23 மாவட்டங்களில் லாபத்துடன் இயங்கி வருகிறது. மேலும் வட்டியில்லா கடன் என்பதாலும் அதிக சேவை குறைந்த லாபம் என்ற நோக்கத்தில் இயங்கி வருவதால் கூட்டுறவு துறையில் வார கடன் மிகவும் குறைவு என்று விளக்கம் அளித்தார்.

அதனை தொடர்ந்து இன்னும் 45 நாட்களில் கூட்டுறவு துறையில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும். கடந்த 10 ஆண்டுகளை விட தற்போது ரேஷன் கடைகளில் திருட்டு என்பது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கையின் மூலம் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |