தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்து செப்டம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் வெளியானது. இந்த படத்தில் வதந்திய தேவனாக நடித்த கார்த்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இதற்கிடையில் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்திலும் நடித்தார் கார்த்தி. இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது ராஜூ முருகனின் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இவர் ஜோக்கர், ஜிப்சி உள்ளிட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படபிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட என நான்கு மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர் ரிலீஸானது. கார்த்தியின் வித்தியாசமான கெட்டப்பில் அட்டகாசமாக வெளியான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜப்பான் படத்தில் இயக்குனர் விஜய் மில்டன் இணைந்துள்ளதாக வெளியாகி உள்ளது. அதாவது, விஜய் மில்டன் ஜப்பானில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.