Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடடே அவரே சொல்லிட்டாரு…!அப்பறம் என்ன ? திருவிழா தான்… அடுத்த ஐபிஎல் குறித்த சூப்பர் தகவல் ….!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் வெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

14வது ஐபிஎல் சீசனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது .இந்த விழாவில் கலந்துகொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறும்போது, “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாடுவதை பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன் .

அதற்கான தருணம் வெகு தொலைவில் இல்லை” என்றார். மேலும் பேசிய அவர்” கூடுதலாக 2புதிய  அணிகள் இத்தொடரில் இணைவதால் நிச்சயம் இந்த தொடரானது  ரசிகர்களுக்கு பெரிய விருந்தாத்தா இருக்கும்.அடுத்த 15-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் “என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |