தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக தற்போது அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
இப்படத்தை நாக வம்சி தயாரிக்க, சம்யுக்தா ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் வாத்தி படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வாத்தி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் முதல் பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.