Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “பாபா” படத்தின் ரீ ரிலீஸ்…. நடிகர் ரஜினியின் மாஸ்டர் பிளான் இதோ….!!!!

“பாபா” திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக நிலைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திரைத்துறையில் பார்க்காத வெற்றிகளை இல்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றியடைந்துள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்துள்ளது என்ற விமர்சனம் அவர் மீது ஏற்படுத்தியது. தற்போது ஹீட் படத்தை கொடுத்தே தீருவேன் என்று முடிவெடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இதனை அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்”  திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, யோகி பாபு மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படம் அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடலாம் என படப்புழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். “லால் சலாம்” என்ற திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குகின்றார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோவாகவும் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ரஜினியின் கதை மற்றும் திரைக்கதையில் வெளியான பாபா திரைப்படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

எனவே இந்த திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார். இது குறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது, ” நடிகர் ரஜினி ஒரு நாள் என்னை அழைத்து “பாபா” திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யலாம் என்று கூறினார். இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி ரசிகர்களுக்கு பிடித்தது போன்று எடிட் செய்து ரிலீஸ் செய்யலாம் என்று கூறினார். எனக்கும் அந்த ஐடியா பிடித்துள்ளது. மேலும் இந்த படத்தை டிவி டிஜிட்டல் தளங்களில் அவ்வளவாக ஒளிபரப்பாகவில்லை. எனவே இந்த படத்தை ரி ரிலீஸ் செய்யலாம் என்று ரஜினி கூறியதாக” அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |