நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகின்றார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பின்னர் “நானே வருவேன்” என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தை “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் கடத்த 1930-40 களில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாக்கவுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்த படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கன்னடா திரையுலகில் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இது குறித்து படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் “ஜெயிலர்” திரைப்படத்திலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் “கேப்டன் மில்லர்” திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கின்றார். ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனையாகிவிட்டதாக கூறப்படுகின்றன. இந்தத் திரைப்படம் கௌபாய் பாணியில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.