“பிக் பாஸ் 6” வீட்டுக்குள் சக போட்டியாளர் விக்ரமனுடன் ஜிபி முத்து தனது குழந்தைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அண்மையில் அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கமலால் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார். “டிக்டாக்” மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் கரை ஒதுங்கினார். சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இந்நிலையில் ஜி.பி முத்து கார்டன் பகுதியில் அவர் விக்ரமனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என கேட்கிறார் முத்து.
Thalaiver to Vikraman Marriage Pannu Appothan neriya Therinjuka Mudiyum #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil https://t.co/eG6kguQWAJ
— Dr Kutty Siva (@drkuttysiva) October 17, 2022
அதற்கு இல்லை என விக்ரமன் பதிலளிக்க, “திருமணம் செய்தபின்னர் தான் பல விஷயங்கள் புரியும்” என உருக்கமாக கூறுகின்றார். மேலும், “கல்யாணம் செய்யுறதுக்கு முன்னாடி அதுல என்ன இருக்குன்னு நினைப்பேன். ஆனா, கல்யாணம் செஞ்ச அப்பறம் தான் பல விஷயங்கள் தெரியுது. தின்பண்டம் வாங்கிட்டு போகும்போது, பிள்ளைகள் அதை பிரிச்சு சாப்பிடுறத பாக்குறதே சந்தோசம் தான். அதுமாதிரி, பிள்ளைகள் ஸ்கூல் போயிட்டு ஓடிவந்து கட்டிப்பிடிச்சுக்கும். அதுல ஒரு சந்தோஷம்”. இவ்வாறு தனது குழந்தைகள் மற்றும் குடும்பம் பற்றி ஜி.பி முத்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.