Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இப்படி சொல்லிட்டாரே…. கவர்ச்சி புயல் சன்னி லியோன் பற்றி ஜிபி முத்து சொன்ன சீக்ரெட்….. என்னன்னு தெரியுமா?….!!!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து 2 வது வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஓமே கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜி.பி. முத்து கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கு இதுதான் என்னுடைய முதல் படம். இயக்குனரிடம் நடிக்க பயமா இருக்குன்னு சொன்னேன். அதற்காக ‌அவர், கவலைப்படாதீங்க சொல்றபடி நடிங்கனு என்று சொன்னார். சன்னி லியோன் யாருன்னு அப்போ எனக்கு தெரியாது. நிறைய கமெண்டெல்லாம் வரும், ஆனாலும் எனக்கு தெரியாது. இதுதான் சன்னி லியோன் சொல்லி சில படத்தை எல்லாம் காமிச்சான் என்று சொல்ல ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழுந்தது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு ஜி.பி.முத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. “ஓ மை கோஸ்ட்” படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Categories

Tech |