தமிழகத்தில் திமுக இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் அரசியலில் முழுமையாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின் அரசியல் கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார். மேலும் திண்ணை பிரச்சாரம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். எம்எல்ஏவான பிறகு களப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பருவமழை வெளுத்து கொண்டிருந்தபோது உதயநிதி ஸ்டாலின் தொகுதி பக்கம் செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். அப்போது முதல்வரும் அவரது தந்தையுமான ஸ்டாலின், ஏன் தொகுதிக்கு சென்று ஆய்வு செய்யவில்லை என உதயநிதியிடம் கேட்டுள்ளார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், என் தொகுதியில் மழைநீர் தேங்கவே இல்லை. தண்ணீரை இல்லாத இடத்துக்கு நான் போய் மழை பெய்வதையா வேடிக்கை பார்ப்பது என கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் சரி வேறு தகுதி சென்று பார்வையிடு என அறிவுறுத்தியுள்ளார். அப்போது உதயநிதி நான் கொளத்தூர் தொகுதிக்கு போகட்டுமா என கேட்க, வேண்டாம் வேண்டாம் கொளத்தூர் என்னுடைய தொகுதி அங்கு நான் போகிறேன் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கூறி நகைத்துள்ளார்.