அதிமுக ஒற்றை தலைமை போட்டியில் எடப்பாடி பழனிச்சாமியே முன்னிலையில் இருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை உயர்நீதிமன்ற அங்கீகரித்தது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரிய படையே துணை நிற்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வதற்கு துணையாக கட்சியிலிருந்து ஒரங்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களை தேடி பிடித்து நிர்வாகிகளாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம் சேர்ந்தது என்ற கேள்விக்கு, இபிஎஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறார். ஆனால் ஓபிஎஸ் அதை செய்யவில்லை. இப்போது அல்ல, எப்போதுமே ஓபிஎஸ் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே பார்த்துக் கொள்வார் என்று பேச்சி எழுந்து வருகிறது. அதுமட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நிர்வாகிகள், தொண்டர்கள் குரலை எடப்பாடி பழனிச்சாமி காது கொடுத்து கேட்கிறார்.
அதன் மூலம் தனது அணுகுமுறைகளும் சில மாற்றங்களை கொண்டு வருகிறார். அது ஓபிஎஸ்ஸிடம் இல்லை என்பது தான் அதிமுகவுக்குள் பெரிய குற்றச்சாட்டாக பேசப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா இருந்த வரை அதிமுக இரும்பு கோட்டையாக இருந்தது. எதிர்க்கட்சிகளோ, கூட்டணி கட்சிகளோ அதிமுகவை அவ்வளவு எளிதாக யாரும் நெருங்கி விட முடியாது. ஆனால் தற்போது பாஜகவிடம் சரண்டர் ஆனது போன்ற தோற்றம் நிலவுகிறது. இதனால் தலைமை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்சிக்குள் கழக குரல் கேட்டது. இதனை எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாலே அமித்ஷா, மோடி ஆகியோரின் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. இது குறித்த கேள்விக்கும் காட்டமாக பதில் அளித்தது நான் பழைய பழனிச்சாமி இல்லை என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் அவரது வலது இடது கைகள் வைத்த கோரிக்கைதான் என்று கூறப்படுகிறது. அதனை போல ஓபிஎஸ்ஸை போலவே அவரும் நமக்கு ஆபத்து என அருகில் இருப்பவர்கள் கூறியதாலேயே அமமுக கூட்டணி குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பிடி பிடித்துள்ளாராம்