Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. இத நீங்க கவனிச்சீங்களா…. கர்ணன் படத்தில் ரஜினி படம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

கர்ணன் படத்தில் தனுஷ், ரஜினி படத்தின் டி-ஷர்ட்டை அணிந்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரி செல்வன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு கௌரி கிஷன் லால் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி ஒன்றில் தனுஷ் ரஜினியின் ‘தளபதி’ புகைப்படம் உடைய டி-ஷர்ட்டை அணிந்துள்ளார். இது ரஜினி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ்

Categories

Tech |