இணையதளத்தில் ஒருவர் செய்த கிண்டலுக்கு நடிகை யாஷிகா சரியான பதிலடி கொடுத்தது ரசிகர்களை அதிர செய்துள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் பயங்கரமான வாகன விபத்தில் சிக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின், இடுப்பு, முதுகு மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது குணமடைந்துவிட்டார். எனினும், அடிக்கடி இணையதளங்களில் சிலர் அவரின் விபத்து குறித்தும் அவரின் தோழியின் மரணம் குறித்தும் கிண்டல் அடித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா இணையத்தளத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒருவர் உங்களுக்கு விபத்து ஏற்பட்ட வீடியோவை அனுப்புகிறீர்களா? வைப் போஸ்ட் போட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதில் தெரிவித்த யாஷிகா, “நீ பிறந்த வீடியோவை அனுப்புறியா? vibe போடுறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.