Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ் பெற்ற நடிகையின் வாழ்க்கை வரலாறுப் படத்தில் நடிகை தமன்னா…. படக்குழு பேச்சுவார்த்தை…!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி எடுக்கப்படும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது பெற்றார்.

இதைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
1960களில் பிரபலமாக இருந்த நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

நடிகை ஜமுனா பிறந்த தினம் இன்று - CInemapluz

இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், பொம்மை கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட உள்ளது. அதில் ஜமுனாவின் கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகையால் தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |