நடிகை டாப்சி முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர்.
அந்த வகையில், நடிகை டாப்சி, தான் முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ நான் முதல்முறையாக நியூயார்க் சென்றபோது இந்த புகைப்படத்தை எடுத்தேன். தவறுதலாக குளிர்காலத்தில் நான் அங்கு சென்றுவிட்டேன்.
முதல்முறையாக மைனஸ் டிகிரி வெப்பநிலையை அனுபவித்தேன்! இரவு உணவு சாப்பிடுவதற்காக, ஒரு ஹோட்டலுக்கு நடந்தே சென்றோம். அப்போது வீசிய குளிர் காற்றால் என்னுடைய உடல் நடுங்கியது. அப்போதுதான் எனக்கு தெரிந்தது இந்த குளிர்காலம் நிச்சயமாக எனக்கு பொருந்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-Wn8HTJDZO/?utm_source=ig_web_button_share_sheet