மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஓன்றில் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். இவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது “லாபம்” என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் “நான் உளவியல் பிரிவை எடுத்துப் படித்தேன். தற்போது கல்லூரியை விட்டு விலகி இருந்தாலும் என்னுடைய சக நண்பர்களோடு அடிக்கடி பேசுவேன். சினிமா எப்போதும் எனக்கு மன அழுத்தத்தை தருகிறது. அதனால் நானும் அவ்வப்போது மனநல மருத்துவர்களை சந்தித்து சில ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடப்பதுண்டு. நாம் அனைவரும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல தயங்குவதால் மன ரீதியாக மிகுந்த கஷ்டபடுகிறோம். ஆனால் பிரச்சனைகளை வெளியில் சொன்னால் மட்டுமே தீர்வு காண முடியும்” என்று கூறியுள்ளார்.