நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளரான சுப்ரமணி தன்னை வீடு புகுந்து தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி என்பவர் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டியை தாக்கியுள்ளார். இது குறித்து அவர் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவர் ஜாமீனில் வெளி வந்தார்.
இந்நிலையில் வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள தமது வீட்டுக்குள் மது போதையில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கியதாகவும், அதுமட்டுமின்றி தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஸ்ரீரெட்டி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சுப்ரமணி அவரது உறவினரான கோபியையும் அழைத்து வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், தமது மேலாளரை தாக்கியதாகவும் ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.