தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ரோஜா. சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த போதே இயக்குனர் ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்ஷு மாலிக்கா என்ற ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியான நிலையில், ஆர்கே செல்வமணி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அவர் அன்ஷு மாலிக்கா அமெரிக்காவில் தங்கி இருந்து 4 வருடங்கள் படிப்பதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து நடிகை ரோஜா திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது நடிகை ரோஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய மகனும் மகளும் சினிமாவில் நுழைந்தால் தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் என்னுடைய மகளுக்கு சினிமாவில் நுழைவதற்கு விருப்பம் கிடையாது. அவள் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்று விருப்பப்படுகிறார். என்னுடைய மகள் என்ன ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறாரோ அதற்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் ரோஜாவின் மகள் 500-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளார் என ஆர்.கே செல்வமணி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.