நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும் குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு எனக்கு இப்போதுதான் புரிகிறது. நான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பிரச்சினை கொடுத்தது கிடையாது என்றார்.
மேலும் சம்பள விஷயத்தில் நான் கூட விட்டுக் கொடுத்துள்ளேன். யாருடனும் எந்த தகராறும் செய்ததே கிடையாது. அதேபோல படப்பிடிப்புக்கு கூட குறிப்பிட்ட (சரியான) நேரத்துக்கு வந்து விடுவேன். இவ்வளவு இறங்கியும் கூட தனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான். நான் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதை விட்டுவிட்டு தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து விட்டதால் தான் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இப்போது நான் சைவமாக மாறி விட்டேன். நான் திடீரென்று தற்போது சைவ உணவு பழக்கத்திற்கு மாற முடிவு செய்து அதை கடுமையாக கடைபிடித்து வருகின்றேன். மும்பையில் படப்பிடிப்பு என்றால் தனது வீட்டிலிருந்து வரும் சைவ உணவையே சாப்பிடுகிறேன். அதுபோல பழங்கள், பழச்சாறுகள் சாப்பிடுகிறேன். இந்தியாவில் எங்கே நான் இருந்தாலும் எனக்கு சைவ உணவு கிடைத்து விடும். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது தான் உடனடியாக சைவ உணவு கிடைப்பதில்லை. என்னுடைய குழுவில் யாருக்கு சைவ உணவு கிடைத்தாலும் அதை எனக்கும் கொடுத்து பசியை தீர்த்து விடுகிறார்கள்.” என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.