Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்கா தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் மலையாள சினிமாவை நோக்கி சென்றுவிட்டார். அதன் பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரியலில் நடிகை ப்ரியங்கா முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் தற்போது மீண்டும் புதிய படத்தில் பிரியங்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த படத்தில் ஒருவர் மட்டுமே நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்காவின் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |