பிரபல நடிகை மற்றும் கோடீஸ்வரியான டிரூ பேரிமோர் என்பவர் தன் முன்னாள் கணவருடைய இரண்டாம் மனைவியை பெரிதாக புகழ்ந்து வியந்து பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் டிரூ பேரிமோரின் என்ற பிரபல நடிகையின் சொத்து மதிப்பு $125 மில்லியன் என்று கூறப்பட்டுள்ளது. இவர் கடந்த 2012ம் வருடத்தில், வில் கோபில்மேன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதன்பின்பு, கடந்த 2016 ஆம் வருடத்தில், இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், வில் கோபில்மேன், மிச்லெர் என்ற 33 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில், டிரூ பேரிமோர் தன் முன்னாள் கணவரின் இரண்டாம் மனைவி பற்றி என்ன பேசுவார்? என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர், மிகவும் சிறந்த பெண்ணை வில் திருமணம் செய்திருக்கிறார்.
அந்த பெண்ணை நான் ஊக்கப்படுத்துவேன். அவர்கள் இருவருடனும் நட்புறவுடன் பழகுவேன். அதே நேரத்தில், அவர்களது தனிப்பட்ட விஷயத்தில் நான் எப்போதும் இடையூறாக இருக்க மாட்டேன். நான் அதிர்ஷ்டசாலி, மிச்லெர், என் கணவரின் வாழ்க்கையில் வந்த பின்பு என் மகள்களுடன் நன்கு பழகுகிறார். என் கணவருடன் அவர் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.