பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிக்காமல் விலகி இருப்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2 வருடமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம் அவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் நடிக்கவில்லை தவிர நடிப்பில் இருந்து நான் ஒய்வு பெற வில்லை. இன்னும் சில நாள்களில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.
என் தந்தை கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இப்போது தான் நாடாளுமன்றம், ராஜ்யசபை பற்றி நன்கு அறிந்துள்ளேன். ஆனால் அரசியலில் ஈடுபட எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. எனது அப்பா போன்ற ஆட்கள் அரசியலுக்கு மிகவும் தேவையானவர்கள். அவர் சமூக பிரச்சினைகளை நல்ல அறிந்தவர் இளைஞர்கள் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து.