Categories
மாநில செய்திகள்

நடிகை மீதான பாலியல் வழக்கு… மணிகண்டனுக்கு மருத்துவ பரிசோதனை…!!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அங்கிருந்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

பரிசோதனை முடிந்த பிறகு அவரை அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில்  வைத்து விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் மணிகண்டனுக்கு தலைமறைவாக இருக்க உதவியாக இருந்த பிரவீன், இளங்கோ ஆகியோர்களுக்கு பரிசோதனை செய்து அதன் பின் போலீசார் விசாரணை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |