தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையில் தற்போது எப்படியாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சலார் மற்றும் ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படத்தை ஓம்ராவத் இயக்க சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வரும் கீர்த்தி சனோன் நடிகர் பிரபாஸை திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு சம்மதம் என்று தெரிவித்துள்ளார். எனக்கு பிரபாஸை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கீர்த்தி கூறியுள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சொன்னது தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அப்போ அனுஷ்காவின் நிலைமை என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.