நடிகை கங்கனா மீது திருட்டு கதை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியீடு வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது திருட்டு வழக்கு புகார் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கங்கனா ரனாவத் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனையாக டிட்டாவின் வாழ்க்கையை படமாக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஷிக் கவுல் தான் தற்போது கங்கனா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, “நான் காஷ்மீரின் போர் வீராங்கனையான டிட்டாவை மையமாக வைத்து ஒரு புத்தகத்தை எழுதினேன். அதனை படம் ஆக்குவதற்காக கங்கனாவிடம் பலதடவை கேட்டேன். இதற்காக இக்கதையை பற்றிய தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன்.
ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்தக் கதையை திருடி தற்போது படமாக எடுக்க உள்ளதாக அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இதனால் தற்போது கங்கனா மீது திருட்டு கதை வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். கங்கனா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.