நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்பு, நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் வருடத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் திடீரென்று திரையுலகை விட்டு ஒதுங்கியிருக்கிறார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அவரின் கணவர் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
#KajalAggarwal Latest pic.twitter.com/IvRlzEBwoM
— Kajal Tamil FC (@kajalTamilFC) February 1, 2022
இந்நிலையில் காஜல் அகர்வால் தன் இணையதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். கர்ப்பமான பிறகு, முதல் முறையாக அவர் புகைப்படம் வெளியிட்டதால், இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.