Categories
சினிமா தமிழ் சினிமா

வறுமையில் வாடும் நடிகை ஜெயதேவியிடம் பண மோசடி…. பைனான்சியர் மீது போலீசில் பரபரப்பு புகார்…..!!!!!!

தமிழ் சினிமாவில் இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயதேவி. இந்த படத்திற்கு பிறகு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பவர் ஆஃப் உமன், புரட்சிக்காரன், பாசம் ஒரு வேஷம், நலம் நலம் அறிய ஆவல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியதோடு சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயதேவி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், நான் 45 ஆண்டுகளாக திரை துறையில் பணியாற்றி வரும் நிலையில், 41 திரைப்படங்களில் நடித்துள்ளேன். அதன் பிறகு ஜெயதேவி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் 21 படங்களை தயாரித்தேன். இதனால் நான் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்து தற்போது வறுமையில் வாடுவதோடு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். கடந்த 2005-ம் ஆண்டு பாடகர் ஹரிஹரன் நடித்த படத்தை நான் மொழி மாற்றம் செய்து வெளியிட முயற்சி செய்தபோது, எனக்கு ரூபாய் 30 லட்சம் பணம் தேவைப்பட்டது.

அப்போது கோவையில் ஒரு பிரபலமான பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஆர்கே மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் கூறி ரகு என்பவர் எனக்கு அறிமுகமானார். இவர் எனக்கு ஒரு நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக 1.20 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டார்.

அவர் சொன்னபடி நான் 1.20 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி கொடுத்த நிலையில், அவர் இதுவரை எனக்கு கடன் பெற்று தராததோடு நான் வாங்கிய பணத்தையும் எனக்கு திருப்பி தரவில்லை. எனவே ரகுவனிடமிருந்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |