Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை திட்டாதீங்க… நிறைய நல்ல விஷயங்களை சொல்லி குடுத்துருக்கு… அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை…!!

கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நடிகை ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகையான ராய்லட்சுமி உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து விட்டார். இதுக்குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் சமுதாயத்தில் யார் எதை செய்யவேண்டும், யார் எதை செய்யக்கூடாது என்பதை கொரோனா காலம் உணர்த்தியுள்ளது. அதோடுபொது மக்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சினிமாத்துறை மட்டுமன்றி எல்லாத் துறைகளிலும் தம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் எதை மறந்தனரோ அதை கொரோனா ஞாபகப்படுத்தி விட்டு போய் இருக்கிறது என்றும், கொரோனாவை திட்டுவதை விடுத்து அது நல்ல விஷயங்களை கற்று கொடுத்து விட்டு போய் இருக்கிறது என்ற எண்ணங்கள் மக்கள் மனதில் தோன்ற வேண்டும். எனவே அது கற்றுக்கொடுத்த பாடத்தை என்றும் மறக்கக் கூடாது என ராய்லட்சுமி கொரோனாவினால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |