Categories
சினிமா தமிழ் சினிமா

நெருங்கிய தோழியின் கணவரை….. 2-வதாக திருமணம் செய்யும் நடிகை ஹன்சிகா?….. வைரலாகும் புகைப்படம்…..!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், வேலாயுதம், வாலு, ரோமியோ ஜூலியட்  போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா கொடிகட்டி பறக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலன் சோகேலுடன் இருக்கும் புகைப்படத்தை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டு தன்னுடைய திருமணத்தை உறுதிப்படுத்தினார். இதனால் நடிகை ஹன்சிகாவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

தொழிலில் பார்ட்னர்களாக இருந்த ஹன்சிகா மற்றும் சோகேல் டிசம்பர் 2-ம் தேதி காதல் திருமணம் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில் ஹன்சிகா ஏற்கனவே திருமணமான சோகேலை 2-வது திருமணம் செய்ய இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ம் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி என்பவரை சோகேல் திருமணம் செய்துள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து சோகேல்  தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தொழிலில் பார்ட்னராக இருந்த ஹன்சிகாவை காதலித்து 2-வது திருமணம் செய்ய இருக்கிறார். மேலும் தோழியின் கணவரை ஹன்சிகா 2-வது திருமணம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |