தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பிறந்தவர் கௌதமி. இவர் நடிப்பில் கடைசியாக பாபநாசம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 1998-ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை நடிகை கௌதமி திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.
அதன்பிறகு நடிகை கௌதமி உலக நாயகன் கமல்ஹாசனுடன் பல வருடங்களாக லிவிங் லைப்பில் இருந்த நிலையில், தன்னுடைய மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை விட்டு விலகி விட்டார். இந்நிலையில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நடிகை கௌதமி தன் மகள் சுப்புலட்சுமியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கோலிவுட்டுக்கு அடுத்த கதாநாயகி ரெடியாகிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.