சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய மாமனார் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் விடுதியில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய வருங்கால கணவர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய மரணத்தில் பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
இதையடுத்து தற்போது சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அதாவது சித்ரா சின்னத்திரையில் பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள், சினிமா நபர்கள் அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். சித்ராவிற்கு மிரட்டல் அல்லது பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்களுக்கு பயந்து அவருடைய தாய் அமைதி காப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.