Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி..!!

நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை யில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு பிறகு சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. தற்போது அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சித்ராவின் செல்போனில் இருந்த தகவலை ரெக்கவரி செய்ததன் மூலம் சித்ரா ஹேம்நாதின் தந்தையிடம் உங்களது மகன் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார். இதனை கொண்டு போலீசார் ஹேம்நாதின் தந்தையிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஹேம்நாதின் தந்தை செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது “சித்ரா இறுதியாக என்னுடன் பேசியதாக வெளியான தகவல் தவறு என்றும், ஹேம்நாத் பதிவு திருமணம் செய்து கொள்ள சித்ரா தான் ஆசைப்பட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு 5 லட்சம் மட்டுமே தங்களால் செலவு செய்ய முடியும் என சித்ராவின் தாயார் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். சித்ரா தற்கொலை தொடர்பாக அவரது தரப்பையும் விசாரிக்க வேண்டும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |