அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணி ஜீ தமிழில் புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து, இந்த சீரியலில் நடிக்கும் சிலர் புதிய சீரியல்கள் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணி பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.