நடிகை அனுபமா கண்ணால் கிறங்கடிக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதன்பிறகு இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது ஒரு அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B2btUcwJl8i/?utm_source=ig_web_button_share_sheet