Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அக்சரா ஹாசனுக்கு காதல் பிரேக் அப்…. அதுவும் இந்த காரணத்துக்காக பிரிஞ்சிட்டாங்களாம்…. லீக்கான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் 2 பேருமே படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அக்சரா ஹாசன் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அக்சரா ஹாசனும், நடிகர் தனுஜ் விர்வானியும் காதலிப்பதாக பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அக்சரா மற்றும் தனுஜ் விர்வானியிடம் காதல் விவரங்கள் குறித்து பல தரப்பினரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இதனையடுத்து தனுஜ் தன்னுடைய இணையதள பக்கத்தில் நானும் அக்சராவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக அறிவித்தார். இருப்பினும் தனுஜ் மற்றும் அக்ஷரா சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதனால் அக்சரா இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தோடு தனுஜ்  அவருக்கு போன் செய்து கேட்கவே அக்சரா தான் புகைப்படங்களை வெளியிடவில்லை என கூறியுள்ளார். அதோடு தன்னுடைய தந்தை அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் தற்போது அதில் கவனம் செலுத்தி வருவதாகவும் புகைப்படங்களை பற்றி கண்டு கொள்வதற்கு எனக்கு நேரம் கிடையாது எனவும் அக்ஷரா கூறியுள்ளார்.

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவே இல்லையாம். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த அக்ஷரா மற்றும் தனுஜுக்கு நாளடைவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பல விஷயங்களில் முரண்பாடுகள் வந்துள்ளது. மேலும் அக்ஷரா நடித்த முதல் படம் மற்றும் தனுஜ் நடித்த முதல் படம் சரிவர ஓடாததால், கமல்ஹாசன் மற்றும் தனுஜின் அம்மா ரதி அக்னிகோத்ரி ஆகியோர் இருவரையும் கண்டித்து படங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளனர். இதன் காரணமாகத்தான் அக்ஷரா மற்றும் தனுஜ் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |