தேசிய விருது பெற்றுள்ள அசுரன் படத்தில் நடிக்க பல நடிகர்கள் மறுத்துள்ளனர்.
முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் பாடங்களுக்கென ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும். ஏனென்றால் இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அதுவும் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படம் தேசிய விருதை பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் இப்படத்தில் நடிக்க கேட்பதற்கு முன் பல நடிகர்களை கேட்டுள்ளார். ஆனால் இப்படத்தில் வயதான கதாபாத்திரம் என்பதால் நடிகர்கள் சிலர் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை. அதன் பிறகுதான் இந்த வாய்ப்பு தனுஷிற்கு சென்றுள்ளது. இப்படத்திற்காக தனுஷ் தற்போது தேசிய விருது கிடைத்திருப்பது இப்படத்தை ஏற்க மறுத்த நடிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.