Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போ….? கேஷுவலாக பதில் சொன்ன முன்னணி நடிகை…. காத்திருக்கும் ரசிகர்கள்….!!

பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தனக்குத் தெரியாது என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வாலின் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் எடுக்கப்பட்டது. இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான குயின் என்ற வெற்றி திரைப்படம்தான் தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் காஜல்அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கியும் அமித் திரிவேதி இசை அமைத்தும் உள்ளனர்.

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கபட்டபோதும் சென்சார் பிரச்சினை காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யாமல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலிடம் பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் “பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என்று எனக்கு கூட தெரியாது. மேலும் இந்த படத்தை ஓடிடி யில் வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறது” என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Categories

Tech |