‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி படங்களில் நடிக்க அதிக பந்தா காட்டி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. நடிகர் சங்கம் இவருக்கு ரெட் கார்டு வழங்கியதன் காரணமாக சில வருடங்களில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதனையடுத்து, மீண்டும் இவர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தற்போது இவர் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல காட்சிகள் ரெடின் கிங்ஸ்லி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படி படமாக்கபட இருக்கிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு வடிவேலு சீக்கிரமாக வந்திருக்கிறார். ஆனால் ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பு தளத்துக்கு 2 மணி நேரம் ஆகியும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. பல மணி நேரம் கழித்து தான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். மேலும், இவர் ”டாக்டர்” படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்களில் நடிக்க அதிக பந்தா காட்டி வருவதாகவும், தனக்கு பிடித்த மாதிரிதான் நடிப்பேன் என கட்டளையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு வடிவேலு, அதிக நேரமாகிவிட்டது. இந்த படப்பிடிப்பை நாளைக்கு நடத்திக் கொள்ளலாம் என கூறிவிட்டு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.