Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கண்டிப்பா உதவி செய்வேன்…அட்வான்சை திரும்ப கொடுத்தாச்சு… நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு அவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வண்ணம் விஷால் உறுதி மேற்கொண்டார்.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து, “சின்னத்தம்பி” திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் பெரும் சாதனை படைத்த கே.பி.பிலிம்ஸ் பாலு என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷால், சரவணன் இயக்கத்தில், மறைந்த தயாரிப்பாளர் பாலு தயாரிப்பில், தான் நடிப்பதாக இருந்த திரைபடத்தின் பூஜை ஸ்டில்லை காட்டி உறுதி எடுத்துக்கொண்டார்.

அப்போது ஒப்பந்தமான அந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்கி, ஆறு மாதத்திற்குள் படத்தை நடத்தி முடித்து அதன் மூலம் வரும் அனைத்து லாபத்தை மறைந்த தயாரிப்பாளர் பாலு அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப் போவதாக விஷால் தெரிவித்துள்ளார். மேலும் விஷாலுக்கு அட்வான்ஸாக வழங்கிய 50 லட்சம் ரூபாயையும் தயாரிப்பாளர் பாலு குடும்பத்தாரிடம் விஷால் திருப்பிக் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |