பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் இன்று #SaveTheniFromNEUTRINO என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்து வருகின்றது.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா-வில் நடிகர் விஜய் தனது பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடிய விஜய் தனது ரசிகர்கள் இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் போடுங்க என்று அறிவுறுதினார்.
நடிகர் விஜயின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அன்றே #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக்_கை ட்ரெண்ட் செய்தனர். அதை தொடர்ந்து இன்று #SaveTheniFromNEUTRINO நியூட்ரினோ திட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்தை காப்பாற்றுங்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.